வாழ்க்கை பற்றிய பொன்மொழிகள்

1. வாழ்க்கையே ஒரு சுமை, அதனை தாங்கிக்கொள்; 
வாழ்க்கை ஒரு முள் கிரீடம் போன்றது, அதனை தலையிலே அணிந்துகொள்.
- அப்ராம்ரியான்

2. நம்பிக்கை கொண்டால் அதுவே வாழ்வின் வெற்றி;
கவலை கொண்டால் அதுவே வாழ்வின் தோல்வி.
- ஷேக்ஸ்பியர்

3. முட்டாள் ஆயுள் முழுதும் வாழும் வாழ்க்கை, அறிவாளி வாழும் ஒருநாள் வாழ்விற்கு சமம்.
- கோல்டன்

4. வாழ்க்கையிலே தன்னம்பிக்கை இல்லாதவன் முன்னேற முடியாது; கடவுள் நம்பிக்கை இல்லாதவன் வாழ்வில் முழுமை பெற முடியாது.
- கீட்ஸ்

5. போர்க்களம் போன்றது வாழ்க்கை; இதிலே யுத்தமும் ரத்தமும் தவிர்க்க முடியாத சக்திகள்; ஏனென்றால் இவைதான் வெற்றியினை  தீர்மானிக்கின்றன.- காண்டேகர்

6. அனைவரையும் திருப்திபடுத்த நீ நினைத்தால் வாழ்வில் வெற்றியே பெறமாட்டாய். - லெனின்

7. உலகிலே எப்படி வாழ்வது என்பதை தெரிந்துகொள்ளும் அளவிற்கு உன்னைநீயே அறிந்துகொள்; அவ்வாறு அறிந்து கொள்வதே வாழ்வில் நீ அடையகூடிய பெரும்பேறு. - ஜேம்ஸ் டக்ஸில்

8. நீ நல்ல வாழ்வினை நடத்த நல்ல பண்புகளை பெற்றிருக்க வேண்டும்.- வில்லியம் பிளேக்

9. ஊஞ்சல் ஆடுவதை போன்றது அல்ல வாழ்க்கை; புயலுக்கு நடுவே படகினை செலுத்துவது போன்றது.
- காண்டேகர்

10. சமாதானத்தை விரும்புபவனாகவும், எப்போதும் சகிப்புத்தன்மை உடையவனாகவும் இருப்பதை எமது இலட்சியமாக இருக்க வேண்டும். -பாரதியார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.