
மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்துபார், ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது "கடவுள் இருக்கிறார்" என்பதே.
ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல, விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை.
மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது, ஆனால் முட்டாள்தனமாகச் செயற்படுவது.
பணமும், பதவியும் மோசமானவை என்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்? அவை வரக்கூடாதவனுக்கு வருவதால், கிடைக்கக்கூடாதவனுக்குக் கிடைப்பதால்.
மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட, ஒரு கணப் பொழுதாயினும் உதவி செய்வது மேல்.
தாய் பசித்திருக்க, தாரத்திற்கு சோறு ஊட்டாதே, நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.
அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி, ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன், ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை, தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.
பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது, உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான் நன்றி நிரம்ப வருகிறது.
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.
நீ கொடுக்கவேண்டியவற்றை நன்றாகக் கொடு, அது உனக்கு 4 மடங்காகத் திருப்பித் தரப்படும்.