வாழ்வியல் தத்துவங்கள். இதை படித்தால் இனி எம் காலமே..!

வாழ்க்கைத் தத்துவங்கள்  மற்றும் பொன்மொழிகள்

1.   சிறந்தவனாக இரு, சிறந்ததை வைத்திரு, சிறந்ததை செய்.

2.   ஓடாத நதியும், தேடாத மனமும் தெளிவு கொள்ளாது.

3. போகும்போதே என்னை ரசித்து கொண்டே போ, திரும்பி வரமாட்டேன் உனக்காக. இப்படிக்கு - வாழ்க்கை.

4.   வாழ்க்கை தரும் பாடம்
எதுவும் சில காலம்தான்.
எதிர்ப்பார்ப்பை குறைத்து கொண்டால் ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக இருக்காது.
நம்பு, யாரையும் முழுமையாக நம்பாதே. உன்னை மட்டும் வாழ்வில் நம்பு.
சிந்தனை செய், கோபப்படாதே.
வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை. அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்துவிட்டு போ.

5.   வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, நீ மற்றவர்கள் மனதில் வாழும்வரை.

6.   அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.

7.   உன் மனம் ஒன்றே உன்னை வீழ்த்தக்கூடிய ஒரே ஆயுதம். அது தெளிவாக இருக்கும் வரையில் நீ ஒருவராலும் வீழ்த்தப்படுவதில்லை.

8.      உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும், மற்றவருக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் அது உன் குற்றம் இல்லை. கண்ணில் பிழை என்றால் பிம்பமும் பிழையே. அது பார்க்கப்படுபவன் பிழையல்ல, பார்ப்பவன்  பிழை.

9.      யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள். ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பதுதான்.

10. இன்பத்திலும் துன்பத்திலும் மனம்விட்டு பேச துணை இல்லாதபோது தான் தெரியும், உண்மையான் அன்பின் பெருமை.

11.  மௌனத்தில் வார்த்தைகளையும், கோபத்தில் அன்பையும் உணர்ந்துகொள்வது தான் உறவு; புரிதல் இருந்தால் பிரிதல் இல்லை.

12.  உங்கள் புன்னகையில் உள்ள சோகத்தையும், கோபத்தில் உள்ள காதலையும், மௌனத்தில் உள்ள காரணத்தையும் யார் புரிந்துகொள்கிறார்களோ அவர்களே உங்கள் அன்புக்கு உரிமை உடையவர்.

13. உரிமை இல்லாத உறவும், உண்மை இல்லாத அன்பும், நேர்மை இல்லாத நட்பும், நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரமில்லை.

14. இழக்கும் வரை ஒருவரின் அருமை நமக்குப் புரிவதில்லை.

15.  ஒருவரின் அருமையை அவர்களை பிரியும் தருணத்தில் மட்டுமே உணர முடியும், நினைவுகளின் துணையோடு.

16.  ஒருவரை இழக்கும் போது வரும் கண்ணீரைவிட, அவர்களை இழக்கக்கூடாது என்று நினைக்கும்போது வரும் கண்ணீருக்கு இன்னும் வலி அதிகம்.

17. எதுவுமே உயர்ந்தது இரண்டு முறை, கிடைப்பதற்கு முன்பு தவறவிட்ட பின்பு.

18. தனிமை கொஞ்சம் வித்தியாசமானது. நாமே அதை எடுத்துக்கொண்டால் அது இனிக்கும், மற்றவர்கள் நமக்கு அதை கொடுத்தால் கசக்கும்.

19.  எல்லோருடைய இதயத்திலும் காயங்கள் உண்டு. அதை வெளிப்படுத்தும் விதம்தான் வித்தியாசம். சிலர் கண்ணீராக, சிலர் புன்னகையாக.

20.  ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு வலி இருந்துகொண்டுதான் இருக்கிறது. அதை முட்டாள்கள் கண்களிலும், அறிவாளிகள் புன்னகையிலும் மறைத்துக் கொள்கிறார்கள்.

21. உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படித்தான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

22. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது, அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது, அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

23. உங்கள் எண்ணம் பண்பட்டு இருந்தால் உங்களுக்கு கெட்ட எண்ணங்களே தோன்றாது. இதனால் உங்கள் சொல்லும், செயலும் தன்னாலேயே பண்பட்டுவிடும். இதனால் உங்கள் எண்ணங்களின் மேல் அதிக கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாதது.

24. நமது சொல் அல்லது செயலுக்கு மூலகாரணியாக இருப்பது நம் எண்ணமே. நாம் எதையும் சொல்லும் முன்போ அல்லது எதையும் செய்யும் முன்போ அதற்கான உந்துதல் முதலில் நம் எண்ணத்தில்தான் உருவாகிறது.

25.  உருவத்தில் எப்படி இருந்தாலும் உள்ளத்தில் குழந்தையாய் இரு, இந்த உலகமே உன்னை நேசிக்கும்.

26. எல்லாக் காயங்களுக்கும் ஒரு மருந்து, குழந்தைகளின் புன்னகை என்னும் அருமருந்து.

27.  எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மௌனம்.

28.  நீ சிரித்து பார் உன் முகம் உனக்கு பிடிக்கும், மற்றவர்களை சிரிக்க வைத்து பார் உன்முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

29.  நட்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்க அருகிலிருப்பவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்.

30. தவறு செய்வது மனித இயல்பு.
நாம் ஒரு தவறை செய்யும்போது,
அதை நியாயப்படுத்தக்கூடாது.
அதை மறுக்கக்கூடாது.
பிறரைக் குற்றம் சாட்டக்கூடாது.
அதை மீண்டும் செய்யக்கூடாது.
பிறகு என்னதான் செய்யவேண்டும்,
ஒப்புக்கொள்ளுங்கள்.
மன்னிப்புக் கோருங்கள்.
கற்றுக் கொள்ளுங்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.