ஒவ்வொருவரும் உலகில் பிறக்கிறோம். வளர்கிறோம். வாழ்கிறோம், முடிவடைகிறோம். வாழ்கிற காலத்தில் பொருட்கள் பல தேவைப்படுகின்றன. சொந்தங்கள் அவசியமாகின்றன.
ஆனால் எவரும் பிறக்கின்றபோது எதையும் கொண்டு வருவதும் இல்லை. இறக்கின்றபோதும் கொண்டு போவதும் இல்லை.
மனித சமுதாயம் தான் ஒவ்வொருவருக்கும் வாழ்வளித்து வருகின்றது. அத்தகைய சமுதாயத்திற்கு தனது அறிவாற்றல், உடலாற்றல் ஆகிய இரண்டின மூலமும் நாம் கடனாற்ற வேண்டும்.
எல்லோரும் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய முறையில் கடனாற்றினால் மனித சமுதாயம் எப்போதும் வளத்துடன் இருக்கும்