காமராஜர் பொன்மொழிகள்!

காமராஜர் பொன்மொழிகள்
நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்

அரசு என்பது எல்லா மக்களுக்குமே சொந்தமானது

படித்த ஜாதி, படிக்காத ஜாதி என்றொரு ஜாதி உண்டாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டியதில்லை. அரசியல்தான் நாட்டுக்கு அஸ்திவாரம். அதைப்பற்றி மாணவர்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். அரசியலைப்பற்றி சிந்திக்காமல் இருப்பது ஆபத்து

திட்டம் மக்கள் திட்டமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த திட்டமும் வெற்றி பெற முடியாது.

ஜாதி என்ற நோயை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

நீங்கள் உங்கள் நண்பரையும் உங்கள் நண்பர் உங்களையும் நன்றாக அறிந்து
கொண்டால் நன்மையை யார் அதிகம் செய்தார்கள் என்பது விளங்கிவிடும்

அப்பாவியான ஏழை மக்களை வசதி படைத்தவர்களும் கல்மனம் படைத்தவர்
களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது அவசியம்

சுதந்திரம் என்றால் பயமில்லாது வாழ்வதுதான். பயமில்லாது வாழ நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்

நான் வட இந்தியாவைப்ம் பார்த்திருக்கிறேன். தமிழ்நாட்டிலோ மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்களையும் கண்டிருக்கிறேன். இந்தியா ஒரு தேசம்தான், ஒரு சக்திதான்.

சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காகவே ஏற்பட்டவை. சட்டத்துக்காகவும், விதிமுறைகளுக்காகவும் மக்கள் இல்லை

தாய்மார் கற்று விட்டால் நாட்டில் தொந்தரவே இருக்காது

நேற்று இன்று நாளை முக்காலத்தையும் உணர வேண்டும். நாம் உணர்ந்தால் போதாது. வாலிப வயதினருக்கும் உணர்த்த வேண்டும்

பெண்கள் விழிப்பு அடைந்தால் குடும்பம் முன்னேறும், கிராமங்கள் முன்னேறும் தேசமே முன்னேறும்

நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும் இவை இரண்டும் போனாலன்றி நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது

நாட்டின் ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஒற்றுமையோடு பாடுபடுவதிலும்தான் நமது முன்னேற்றம் இருக்கிறது’’

நம் நாட்டின் அரசியல் பொருளாதார அமைப்பு மக்களின் விருப்பப்படி இருக்க வேண்டும். மக்கள் தங்கள் சக்திகளை வீணாக்காமல் சோசலிச சமுதாயத்திலும், சுயாட்சியிலும் நம்பிக்கை உடையவர்களாக இருந்து புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்

லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். பலாத்காரப் புரட்சி தேவையில்லை.

அரசியல்வாதிகள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் பொழுது அது மக்களுக்கு கோழிச்சண்டையைப் பார்ப்பதுபோல் வேடிக்கையளிப்பதாக உள்ளது.

நம்மில் எவரும் பதவியையும், அதிகாரத்தையும் விட்டு விடப்பயப்படவில்லை. அதிகாரம் என்பது நமக்குச் சந்ததியாக வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பலம் பெறுபவர்களே பதவிக்கு வரமுடியும். மக்களின் ஆதரவு இன்றி ஒரு நாள் கூட ஆட்சியில் நீடிக்க முடியாது

ஏழை மக்களைத் துன்பத்திலிருந்து மீ்ட்க்க முடிந்த மட்டும் பாடுபடு வேன். இல்லையெனில் நான் இருப்பதில் எவ்விதப்பயனும் இல்லை

நாம் எதைச் செய்தாலும் ஏன் அதைச் செய்கிறோம் என்று மக்களுக்கு சொல்ல வேண்டும்

ஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
காமராசர் என அழைக்கப்படும் காமராஜர் சொன்ன வார்த்தைகள் மற்றும் வரிகள் இங்கே காமராஜர் பொன்மொழிகள் என வெளியிடப்படுகின்றன. இவற்றையே காமராஜர் தத்துவங்கள் என்றும் அழைக்கின்றனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.