கிராம வாழ்க்கை இருதலைக் கொள்ளி எறும்பா?

மேல்தட்டு மக்களும், பணக்காரர்களும் நோயால் பாதிக்கப்படுவதற்கு மாறிவரும் நகரவாழ்க்கை முறைகளும், உணவுப் பழக்க வழக்கங்களும்தான் காரணம் என நாம் ஆசுவாசப்படலாம். ஆனால், எந்த நோய்கள் நகரங்களில் வாழும் மேட்டுக் குடியினரையும், பணக்காரர்களையும் பாதிக்கின்றதோ அதே நோய் கிராமவாசிகளையும் தாக்குகிறது என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்தியாவில் 18 மாவட்டங்களில் 1600 கிராமங்களைச் சார்ந்த 2000 கிராமவாசிகளிடம் நடத்திய மாதிரி சர்வே அறிக்கையை பிரிட்டீஷ் மெடிக்கல் ஜெர்னல் வெளியிட்டுள்ளது.

இதயநோய், நீரழிவு நோய், கொலஸ்ட்ரால், ஹைபர் டென்சன்போன்ற நோய்கள் இந்தியாவில் கிராமவாசிகளையும் தாக்கியுள்ளது எனக் கூறுகிறது அவ்வறிக்கை.

தென்னிந்திய மக்கள் வட இந்தியவர்களை விட உடல் பருமன் அதிகமானவர்களாக காணப்படுவதற்கு காரணம் சுத்திகரிக்கப்பட்ட அரிசியை உணவாக உட்கொள்வதுதான் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

கிராமவாசிகளை, நகரவாசிகளை பீடித்திருக்கும்நோய்கள் தாக்குவதற்கு, உலகமயமாக்கலின் விளைவாக கிராமங்கள்நகரமயமாகி வருவதுதான் காரணம் கூறப்படுகிறது.

கலோரி கூடிய உணவுப் பொருட்களும், junk food என்றழைக்கப்படும் வேண்டாத உணவும் கிராமங்களை நோக்கி வருவதற்கு காரணம் கிராமங்கள் நகர மயமாகி வருவதுதான்.
கிராமங்களிலுள்ள சுகாதார மையங்களால் இத்தகைய நோய்களைதடுப்பதற்குரிய போதிய வசதிகள் இல்லை. விழிப்புணர்வின் மூலம் மட்டுமே இதனை தடுக்க இயலும். குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோருக்கு இந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வு மிக அவசியமாகும்.

இரட்டை சுகாதாரக் கொள்கை தேவை என்பதை இவ்வாய்வு சுட்டிக் காட்டுகிறது. வறுமை மற்றும் ஊட்டச்சத்துக் குறைவினால் ஏற்படும் நோய்கள் ஒருபுறம், நகரங்களைப் போன்ற வாழ்க்கை முறைகளால் ஏற்படும் நோய்கள் இன்னொரு புறம். ஆகவே கிராம வாழ்க்கை இருதலைக் கொள்ளி எறும்பாக மாறிவிடுமோ? என்ற அச்சம் நம்முன்எழுகிறது.

நன்றி: தேஜஸ் மலையாள நாளிதழ்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.