தந்தை பெரியாரின் கதை

திரா விடத் தந்தை யாகிய ஈ.வே.ராமசாமி பெரி யார் பேசு வதை எத் தனை நேரம் வேண்டுமா னாலும் கே ட்டுக் கொ ண்டே இருக் கலாம். மேடைப் பேச்சைவிட தனி யாக சம்பா ஷித்துக் கொண் டு இருக்கும் போது அதிகச் சுவைதட்டும்.

அவர் ஒரு தடவை விருது நகரிலிருந்து திருச்சிராப் பள்ளிக்கு மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்து கொண்டி ருந்தார். அவருடைய தோழர்ஒருவர் அதேரயிலில் இரண்டாம் வகுப்பில் (இப்போது அது முதல் வகுப்பு) சென்னைக்குபோய் கொண்டிருந்தார்.

இரண் டாவது வகுப் பில் இருந்த அவர் தூங் கும் முன் பெரியாருடன் கொஞ்ச நேரம் பேசிக்கொ ண்டிருக்க விரும் பினார். ஆகையால் அவர் பிரயா ணமும்
கொஞ்சதூரம் மூன்றா வது வகுப்பில் தொடர் ந்தது.

மதுரையில் ஒருபிராமண வக்கீல் அந்தவண்டியில் ஏறினார். அதுஎப்படி ஏற்பட் டது என்று பெரியார் கவனிக்கவில்லை, ஆனால் வெகு சீக்கிரத் திலேயே தம் தோழ ரும் வக்கீ லும் பெரி ய வாக்கு வாதத்தில் இறங்கி யிருப்பதைக் கண்டார். பலமானசத்தம் வேறு.

இருவ ருமே ஒரேசமயத்தில் கடுமை யான வசைபுராணத்தில் இறங்கி விட்டார்கள். தமிழி லும் ஆங்கில த்திலும் உள்ள கீழ் த்தரமான வார் த்தைகள் சரவெ டியாய் மு ழங்கின. சில நிமி ஷங்கள் வரை வண்டி யிலுள்ள மற்ற பிர யாணிகள் தங்க ளுக்குள் பேசிக்கொ ண்டிருப்பதை நிறுத் திவிட்டு இந்த சொல் சண் டையை கவனித்துக்கொண்டு இருந் தார்கள்.

கொஞ்ச நேரத்தில் பேச்சு சண் டையின் வேகம் குறை ந்தது. இருவ ரும் பெருமூச்சு விட்டுக் கொண் டார்கள். இந்த இடைப்பட்ட நேரத் தில் பெரியார் தம் தோ ழரைக் கண் டித்தார், “அவர் என்ன சொல் கிறார் என்பதை க்கூட தெரிந்து கொள் ளாமல் அவர் பேசிக் கொண்டி ருக்கும் போதே நீங் களும் பேசு வதில் என்ன பயன்” என்று கே ட்டார்.

தமக்கு ஆதர வாக ஒரு பெரியவர் கிடைத் ததை நினைத் து பிரா மண வக்கீல் சந்தோஷ ப்பட்டார். "அவர் ராமசாமி நாய க்கன் ஆளு சார்! அவருடன் பே ச்சுக் கொடுத் தாலே இப்படித் தான்!” என்றார்.

அது தானே நானும் சொல்லு கிறேன்? அதுதெ ரியாமல் நன்றாகப் படித்த நீங்கள் கூட இப்ப டி வீண் வாதத்தில் இற ங்கி விட்டீ ர்களே!” என்றார் பெரி யவர். வக்கீ லுடன் அன்பாக பேச ஆரம் பித்தார்.

திண் டுக்கல் வந்தது. தோழர் பெரியா ரிடம் விடைப் பெற்றுக் கொண்டு, இரண் டாம் வகுப்பு க்குப் பெட்டி க்குப் போய் படுத்துக் கொண்டார்.

வக்கீலு டைய வாழ் க்கை விவர ங்களை யெல்லாம் பெரி யார் ஆதர வாக விசாரித்தார். இவ்வளவு நல்ல பெரியவர் ஒருவர் இருப்பதை பற்றி வக்கீல் அடிக்கடி தம் ஆச்சரி யத்தை தெரிவித்துக் கொண்டி ருந்தார்.

திருச்சிராப் பள்ளி நெருங் கிற்று, “உங்களைப் பற்றி நான் இவ்வளவு தெரிந்து கொண்டேன். ஆனால் நான் யார், எந்த ஊர்” என்று கூட நீங்கள் கேட்கவில் லையே!” என்றார் பெரியார்,

வக்கீல் சற்று வெட்க ப்பட்டார், “உண்மை தான் தாங்கள் யார் என்று  தெரியவில்லையே?”

“தாங் கள் கொஞ்ச நேரத் திற்கு முன்பு ராம சாமி நாய க்கன் என்று சொன்னீ ர்களே.. அந்த நாய க்கன் நான்தான்”  இப்படி சொல்லிப் புன் சிரிப்பு சிரித்துக் கொண் டே பெரியார்  ரயிலை விட்டு இறங்கி விட்டார். வக்கீல் அதி ர்ந்து நின்றார்.
--------------------------------------------------------------------------------------------------------------
100 தலைவர்கள் 100 தகவல்கள் புத்தகத்தின் இரண்டாவது கதை
--------------------------------------------------------------------------------------------------------------
தந்தை பெரியாரின் கதை
--------------------------------------------------------------------------------------------------------------

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.