தத்துவம் சொல்லும் அமெரிக்க பழமொழிகள்!

ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.

உன்னிடம் வம்பளப்பவன் உன்னை பற்றியும் வம்பு அளப்பான்.

செயலே புகழ் பேசும்.

உடையவனின் பாதம் வயலுக்கு உரம்.

சிறு செலவுகள் முழுச் செல்வத்தையும் விழுங்குகின்றன

தோல்வி ஏற்படும் நேரத்தில்தான் மாவீர்ர்கள் உருவாகிறார்கள். ஆகவே, தொடர்ச்சியான பல பெரிய தோல்விகளே வெற்றி என்பதாக வர்ணிக்கப்படுகிறது.

தீயோர் நேசத்தைவிட தனிமை மேலானது.

வலிமை வாய்ந்த நண்பன் வலிமை மிகுந்த எதிரியாக மாறுவான்.

பல் இல்லாமல் இருந்தால்கூட ஒரு கலைமானால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடியும்.

ஒரு பொருளின் இன்றியமையாமை அது தேவைப்படும்போது தான் தெரியும்.

ஒரு மனிதனுக்கு உணவு மற்றவனுக்கு நஞ்சு

தள்ள முடியவில்லையென்றால் இழு; இழுக்க முடியவில்லை என்றால் வழியைவிட்டுப் போய்விடு.

ஆபத்து இல்லை; புகழும் இல்லை.

நம்முடைய அறிவுரையை ஏற்றுக்கொள்ளாதவர்களை நாம் வெறுக்கிறோம். நம்முடைய அறிவுரைப்படி நடக்கிறவரை நாம் வஞ்சிக்கிறோம்.

அதிர்ஷ்டம் தைரியத்திற்குச் சலுகை புரிகிறது.

ஒருவரைத் தண்டிப்பதைவிட தயவு காட்டுவது அதிக வல்லமை உள்ளதாகும்.

ஒரு பறவையும் ஒரு கூண்டையும் நீ விரும்பினால், நீ முதலில் கூண்டை வாங்கு.

மேதைத் தன்மை ஒரு பரம்பரை உரிமையன்று.

பொதுவான விதி ஒவ்வொன்றிற்கும் ஒரு விதி வில்கு உண்டு.

வெறுமையான பை நேராக நிற்க முடியாது.

ஒரு மனிதனை நீ மன்னிக்கும் ஒவ்வொரு நேரமும் நீ அவனை பலப்படுத்தி உன்னையும் பலப்படுத்திக் கொள்கிறாய்.

கோயிலுக்கு அருகாமை கடவுளுக்கு வெகுதூரம்.

இந்த வாழ்வில் நுழைவதற்கு ஒரு வழியைத்தவிர வேறு வழி இல்லை. ஆனால் மரணத்தின் வாயில்கள் எண்ணிலடங்காமல் இருக்கின்றன.

உண்மை எல்லாச் சமயங்களிலும் பேசப்படுவதற்கல்ல.

உடலையும் ஆன்மாவையும் ஒன்றாகவே வைத்திரு.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.