அவமானங்களை வெகுமானங்களாக மாற்றிய ஆப்ரஹாம் லிங்கன் – உண்மைச் சம்பவம்


அவமானங்களை வெகுமானங்களாக மாற்றிய ஆப்ரஹாம் லிங்கன் – உண்மைச் சம்பவம்

அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரை நிகழ்த்தும்போது, அவரை மட்டம் தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து,

ஆப்ரஹாம் … உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது என்றாரா ம்  ….அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம்,

” நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகி விட்டது, இருப்பினும் அவர் தைத்துக் கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக் கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எர்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன். எனக்கு செருப்பு தைக்கவும்தெரியும்… நாட்டை ஆளவும்தெரியும் என்று பதிலுரை த்தாராம் … … !!!

தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந் து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது பதவியில் இருக்கும் போதும் அவமானப்படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலிதனமாக பணிவோடு பதில் அளித்தே அவமானப் படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன். இந்த பக்குவமான மனதாலும் விடா முயற் சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதி பதி யாகி அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.

இதைத்தான் கண்ணதாசனும் “நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்” என்றார். இன்றும் பல உயிர்கள் வணங்கு கின்றன லிங்கனை…

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.