பொதுவான தமிழ் தத்துவங்கள் - 02

ஏழைகள்...... "உணவு இல்லை" என்பதால் உண்ணவில்லை...
பணக்காரர்கள்... "பசியில்லை"என்பதால் உண்ணமுடிவதில்லை

 நன்மை தரும் ஏழு விஷயங்கள்.

1) பதவியிலும் பணிவு.
2) துன்பத்திலும் துணிவு.
3) ஏழ்மையிலும் நேர்மை.
4) செல்வத்திலும் எளிமை.
5) கோபத்திலும் பொறுமை.
6) தோல்வியிலும் விடாமுயற்சி.
7) வறுமையிலும் உதவி செய்யும் மனம்.

.அரசியல்வாதிகள்.....
இலட்சங்களுக்காகவும், இருக்கைகளுக்காகவும்
இலட்சியத்தை அலட்சியம் செய்பவர்கள்......

காகிதம் மேலே பறப்பது காற்றடிப்பதால்.... ஆனால்...
பறவை மேலே பறப்பது அதன் முயற்சியால்...
அதனால்...
உழைப்பை நம்புங்கள்.... அது மட்டுமே வெற்றியை கொண்டு வரும்...

குறைகளை தன்னிடம் தேடுபவன் தெளிவடைகின்றான்.
குறைகளை பிறரிடம் தேடுபவன் களங்கப்படுகிறான்.....

நீங்கள் நல்லவராக இல்லை என்றாலும் பரவாயில்லை..
நல்லவரை போல நடியுங்கள்....
நல்லதையே செய்வது போல நடியுங்கள்...
நல்லதையே பேசுவது போல நடியுங்கள்....
நாளடைவில் அந்த சூழலே உங்களை நல்லவராக்கி விடும்.....

பிரச்சனைகள் அனைத்தும் தற்காலிமானவையே.... உங்களின் பழைய பிரச்சினைகள் எத்தனை நாட்கள் உங்களை வாட்டியது, எப்படி தீர்ந்தது.
என்று சற்றே சிந்தித்து பாருங்கள்......

பொறுமையும், துணிவும், தன்னம்பிக்கையும் இருந்தால் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விடலாம்....

நம் கையை விட்டு போன இறந்த காலம்.... இன்னும் நம் கைக்கே வராத எதிர்காலம்....
ஆகியவற்றைபற்றி கவலைப்படுவதால் தான்,
நிகழ்காலத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது..

"நீங்கள் இப்போது என்னவாக இருக்கிறீர்கள்" என்பது
"எதிர் காலத்தில் என்னவாக இருக்கப்போகிறீர்கள்"
என்பதைக் காட்டிலும் முக்கியமானது...

இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை.
அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள்.
சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை.
நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள்....
பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை...
பகலுக்காக மகிழ்வதுமில்லை...

வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது.
நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.
ஒவ்வொரு மனிதனின் கையிலும்  அழகான வாழ்க்கை இருக்கிறது.
அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில் தான் தோன்ற மறுக்கிறது.

ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்,உன் விழிகளை கண்ணீரால் நிரப்பாதே...
அது உன் முன் உள்ள மற்றொரு  வாய்ப்பை மறைத்துவிடும்......
புன்னகையோடு முயற்சித்துப்பார்...... அது உன் கஷ்டங்களை மாற்றிவிடும்..

ஒருவன், "தான் பெரியவன்" என்னும் தன்முனைப்போடு இருக்கும் வரை அவனுள் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. தன்னலமற்ற தன்மையுடன் உலகத்திற்கு பயனுள்ளவனாக மாறும்போதே அவன் தன்னிலையிலிருந்து உயர்வடைகிறான்.

அவமானம், தோல்வி, வறுமை இவை எல்லாம்
நம்மை நல்ல சிலையாக மாற்றும் சிற்பிகள்...
அதனால், அவற்றை எண்ணி வருந்தாதீர்கள்.. இது தான் அனுபவ பாடம்.....

உழைப்பை தேடி ஓடு...  உதவியை தேடி ஓடாதே....

விண்ணை தொடும் போதோ, எனது "மதி" என்கிறான்...
மண்ணில் விழும் போதோ,  எனது "விதி" என்கிறான்...
வெற்றியை தனதாக்கி கொள்ளும் மானிடன்,
தோல்வியை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்வதில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.