நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இன் சிறந்த 10 தத்துவங்கள்!

இந்தியா விடுதலைக்காக இறுதி மூச்சு வரை போராடிய நேதாஜி என அனைவராலும் அறியப்பட்ட சுபாஸ் சந்திரபோஸ் சொன்ன தத்துவங்கள் மற்றும் பொன்மொழிகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

1. சரித்திரம் வலிமையனாது. இதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் எளிதானவை அல்ல.

2. தன்னை மாற்றுவதற்கு தயாராக இருப்பவனே உலகத்தை மாற்றுவதற்கு தகுதியனாவன்.

3. தன்னம்பிக்கை இருந்தால் சாதிக்க முடியாதவற்றை கூட சாதிக்க முடியும்.

4.தனது சுற்றத்தை விட்டு பிற நாட்டுடன் கூட்டுறவு வைத்துக் கொள்ள பயப்படும் சமுதாயத்தின் வீழ்ச்சியானது எதிர்பார்க்க கூடியதே.

5. தலைவனை தேடுவதை விடுத்து நீங்கள் உங்களது காரியத்தை நிறுத்தி விடாதீர்கள். நாட்கள் செல்ல செல்ல நீங்களே தலைவனாக வந்துவிட முடியும்.

6. உண்மையான நண்பனாக இரு இல்லாவிட்டால் உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ அரை நம்பிக்கை உடையவனாக இருக்காதே!

7. செல்வத்தை கடவுள் எமக்கு கொடுக்க வில்லையே என்று கவலைப்படுவதை நிறுத்து! உயிர் எனும் மிகப்பெரும் செல்வத்தை கடவுள் கொடுத்திருக்கிறான். அதை வைத்து எதையும் சாதிக்கலாம்.

8. எந்த செயலையும் செய்யாது பயனற்று கிடக்கும் மனிதர்கள் ஜடங்கள்(உயிரற்றவர்கள்) அவர்கள் வெறும் புழுபூச்சிகளை போல இவ் உலகில் இருப்பார்கள் சரித்திரத்தில் இடம்பிடிக்க மாட்டார்கள்.

9. உயர்ந்த சிந்தனை வழியாக சளையாத உழைபால், பயன் அற்று போகும் வாழ்க்கையை, அழியாத ஒரு இலட்சியத்திற்கு தாய் நாட்டின் விடுதலைக்கு ஈடு  செய்ய வேண்டும். அதுவே நமது வாழ்வை அர்த்தம் உடையதாக்கும்.

10. ஒருவொருக்கு ஒருவர் விட்டு கொடுக்காது போனால் அரை நிமிடங்கள் கூட இவ்வுலகத்தில் நாம் வாழ்வை நடத்த முடியாது. இந்த மனித இனத்திற்கு  அத்தகையதோர் ஒற்றுமை இல்லாவிட்டால் கட்டாயம் அழிந்தேவிடும்.

=====================================================================

தேடல்பொறி / நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தத்துவங்கள் / பொன்மொழிகள் / தத்துவ வரிகள் / தத்துவகருத்துக்கள்

=====================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.