நேருவின் சிறந்த 20 தத்துவங்கள்!

இவற்றை நாம் கற்பனையில் எழுதவில்லை. இந்தியா பிரதமர் ஜவகர்லால் நேரு பொன்மொழிகள் இங்கே நேருவின் தத்துவங்கள் எனும் தலைப்பில் வெளியிடப்படுகிறது.

1. அறநெறியை மறந்தால் அழிவு ஒன்றே விளைவாகும்.

2. திட்டமிடாது செய்யப்படும் செயலானது, துடுப்பில்லாமல் பயனிக்கும் படகுக்கு ஒப்பானது.

3. அடக்கம் மிகவும் நல்லது. ஆனால் அவ்வடக்கம் அடிமைத்தனமாக இருக்க கூடாது.

4. அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்று கொள்ளப்படும்.

5. உலக வரலாறு படிப்பதைவிடுத்து புதிய வரலாற்றை படை.

6. உடல் நலனை பாதுகாப்பதை போல நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும்.

7. நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது, அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.

8. வாய்மைக்கு மிகவும் நெருக்கமான நண்பன் அச்சமின்மையே.

9. மிரட்டி அடிபணிய வைக்கும் எந்தவொரு செயலும் வெறுக்கதக்கதே.

10. சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியான மனிதன்.

11. புரட்சிகரமான மாறுதல் ஏற்பட வேண்டுமென நீங்கள் விரும்பினால், நீங்கள் பின்பற்றிய கொள்கைக்கு மேலாக மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும்.

12. பெண்களுக்கான சுதந்திரத்தை வழங்காத நாடு சுபீட்சம் அடையாது.

13. செயல் இல்லாத சிந்தனை அழிவினை தரும். சிந்திக்காமல் செய்யும் செயல் அர்த்தம் அற்றது,ஆகவே சிந்தனையும் செயலும் ஒன்றுபடும் முயற்சி வேண்டும்.

14. காரியங்களை செய்வதற்குப் பதிலாக, அவற்றை பற்றி தொடர்ந்து பேசிகொண்டு இருப்பதே எமது முக்கிய குறைபாடு!

15. மனிதனைவிட மிகவும் சக்திவாய்ந்தது சூழ்நிலையே.

16. கோழைத்தனம் என்பது அனைத்தையும் பாழாக்கும். வீரமே அனைத்தையும் வெல்லும். கோழைகள் தான் வன்முறையில் ஈடுபடுவார்கள். வீரர்கள் எப்போதும் சமாதானத்தைத்தான் நாடுவார்கள்.

17. அச்சமென்பது அறிவின் ஆரம்பம் பொய்மைக்கு மிகவும் நெருங்கிய நண்பன்.

18. நீ சொல்வது முக்கியமல்ல. எதனை செய்கிறாய் என்பதே முக்கியம்.

19. கோபமாக பேசும்போது அறிவு முகத்தினை மறைத்து கொள்கிறது.

20. துணிந்து செயல்படுபவனுக்கே வெற்றி கிட்டும். கோழைகளின் பக்கம் வெற்றி தலை வைத்து கூட படுப்பதில்லை.

*********************

 Jawaharlal Nehru Tamil Quotes 

*********************
=====================================================================
தேடல்பொறி / பேரறிஞர் அண்ணா சொன்ன தத்துவங்கள் / பொன்மொழிகள் / தத்துவ வரிகள் / தத்துவகருத்துக்கள்
=====================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.