அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்!

 அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் சொன்ன தத்துவங்கள் இங்கே ஆபிரகாம்லிங்கன் பொன்மொழிகள் என வெளியிடப்படுகிறது.

"எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்!" - 


1. எல்லோரையும் நம்புவது ஆபத்தானது. ஆனால் ஒருவரையும் நம்பாமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.

2. நான் இன்னும் படிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி தருபவனே தலைசிறந்த நண்பன் என நான் கருதுகிறேன்.

3. நான் மெதுவாக பயணிப்பவன் தான் ஆனால், ஒருபோதும் இலட்சியத்திலிருந்து பின்வாங்குவதில்லை.

4. நான் எனக்கென தனியான கொள்கைகளை கடைப்பிடிப்பதில்லை. எனது சிந்தனையின் தோன்றுவதை சிறப்பாக செய்வேன் அவ்வளவுதான்.

5. எமக்கான வாய்ப்பு நம்மை தேடிவரும் வரை நாம் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

6. வெற்றிக்காக ஏமாற்றுவதை விட தோற்று போவது மரியாதைக்கு உரியது.

7. ஒருவருக்கு ஒருவர் இரு ரூபாயை பகிர்ந்தால் நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். ஆனால், நம் இருவரும் நல்ல எண்ணங்களை பகிர்ந்து கொண்டால் நம்மிடம் நல்ல எண்ணங்கள் இருக்கும்.

8. அவசர படுபவர்களுக்கு எந்த விஷயம் தெரியது. ஆனால் பொறுமையாக காத்திருந்தால் அனைத்து விஷயங்களும் தெரியக்கூடும்

9. உங்களை மற்றவர்கள் மதிக்க வில்லை என்று ஒரு பொழுதும் கலங்காதீர்கள் அவர்கள் உங்களை மதிக்கும் அளவிற்கு நீங்கள் உயர்ந்து காட்டுங்கள்.

10. புகழை வேண்டினால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நிம்மதியை வேண்டாதீர்கள்.

11. நாளை இந்த வேலையை செய்வோம் என்டு இன்று செய்ய வேண்டியவற்றை நாளைக்கு தள்ளிப் போடாதீர்கள்.

12. என் அம்மாவிடமிருந்து தான் எனக்கு தைரியம் தன்னம்பிக்கை என அனைத்துமே கிடைத்தது.

13. ஒரு மரத்தை வெட்ட எனக்கு ஆறு மணிநேரம் அழிக்கப்பட்டால் அதில் நான்கு மணிநேரத்தை கோடாரியை கூர்திட்டவே பயன்படுத்துவேன்.

14. நாம் செய்யும் ஒரு வேலையை நம்மால் முடிந்தவரை சிறப்பாக, இறுதிவரை செய்ய வேண்டும்.

15. உழைப்பே மிஞ்சும் சக்தி இவ் உலகத்தில் வேறு எந்த சக்திக்கும் கிடையாது, உழைப்பே உலகத்தின் உன்னதமான சக்தியாகும்.

16. போகும் வழியில் கிடைத்த 5 ரூபாயை விட நம் கடின உழைப்பினால் கிடைத்த ஒரு ரூபாய்க்கு அந்த ஐந்து ரூபாயை விட மதிப்பு அதிகம்

17. இவ்வுலகத்தில் அனைவருக்கும் பிடித்த விஷயம் பாராட்டு தான்.

18. யார் ஒருவர் உதவும் எண்ணம் கொண்டவரும் அவர் தான் உண்மையாக விமர்சித்த தகுதியானவர்.

19. இன்றைய தவிர் பின் மூலம் உங்களுக்கான நாளைய பொறுப்பில் இருந்து தப்பிக்க முடியாது.

20. பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால், எல்லாரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

21. ஊக்கத்தையும், தன்னடக்கத்தையும் மனித சுதந்திரத்தை பறித்து கொண்டு வர முடியாது.

22. சாதாரணமான உள்ள மனிதர்களை தான் இறைவன் அதிகம் விரும்புகிறார்கள் போல, அதனால்தான் அவர்களை உலகத்தில் அதிகமாக படைக்கிறார்.

23. அனைத்து மக்களுக்கும் நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டு தான் ஆனால் வயதாகாமல் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

=====================================================================
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தத்துவங்கள், சிந்தனைகள், பொன்மொழிகள் / தத்துவ வரிகள் / தத்துவகருத்துக்கள்
=====================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.