சீன தத்துவஞானி கன்பூசியஸ் தத்துவங்கள்!

இவற்றை நாம் கற்பனையில் எழுதவில்லை சீனா தத்துவஞானி கன்பூசியல் அவர்கள் சொன்ன கருத்துகளே இங்கே கன்பூசியஸ் தத்துவங்கள் எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை கருத்தில் வையுங்கள்!
************
சிறு தவறுகளை திருத்தாவிட்டால் பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது.


தனக்குத் தெரிந்தவற்றை தெரியும் எனவும், தெரியாதவற்றை தெரியாது எனவும் சொல்வதுதான் அறிவு.



தீயனவை உற்பத்தி செய்யும் இடம் இதயம்; தீயனவற்றை விற்கும் இடம் நாக்கு.
                  

ஓழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.


சிறு விடையங்களை செய்யும் போது பொறுமை காட்டாவிட்டால் பெரிய காரியங்கள் கெட்டுபோகின்றன.



உங்களுக்கு சரியான ஆலோசனை வழங்ககூடிய பெரியமனிதர் உங்களைத் தவிர வேறுயாராகவும் இருக்கமுடியாது.



பயத்தை மனதிற்கு உள்ளேயே பயிர் செய்பவன் பாம்பை மனதில்வளர்க்கிறான்.



ஓர்ஏழையின் செல்வம் அவனதுதிறமைதான்.


நமது செயல்களை தீர்மானிக்கும் அளவிற்கு நம்செயல்களும் நம்மைதீர்மானிக்கின்றன.


இரக்கமுள்ள நெஞ்சில் அன்புபிறக்கும், நாணமுள்ள நெஞ்சில் அறம்பிறக்கும்.

ஒவ்வொன்றும் அழகுடையதே. ஆனால் எல்லோருடைய கண்களும் அதைக்காண்பதில்லை.

அறிஞர்கள் சிந்திக்காது விட்டால் அறிவிலிகள் ஆவார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகுகிறார்கள்.

மனதை கடமையில் செலுத்துங்கள்.ஒழுக்கத்தை கடைபிடிங்கள். அன்புக்குக் கட்டு படுங்கள். மேலான கலைகளில் மனதைசெலுத்தி அமைதி பெறுங்கள்.
  
நீங்கள் செய்யும்தவறை உடனே திருத்தி கொள்ளுங்கள். இல்லாவிட்டால் இன்னொரு தவறைசெய்தவராகி விடுவீர்கள்.
    
புகழைப் பொருட்படுத்தாதீர்கள் ஆனால்புகழ் பெறுவதற்குத் தகுதி உடையவராக உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
 
நேர்மையும் சத்தியமுமே ஒவ்வொரு பண்புக்கும்அடிப்படை.

உன்னதநெறிகளையும், உயர்ந்தமதியும், நேர்மையும் கொண்டவரே உயர்ந்தமனிதர்.

நீ வாயைதிறக்கும் போதெல்லாம் உன்உள்ளத்தைத் திறக்கிறாய். ஆகவே, கவனமாகஇரு.

கோபம் தலை தூக்கும் போது, அதன்பின் விளைவுகளை சிந்தித்துப்பாருங்கள்.

மனிதசமூகம் மதிக்காதிருந்தபோதும் மனம்மாறாதிருப்பதே மாட்சி.

உங்களுக்குஎதை மற்றவர்செய்தால் நீங்கள் அதைவிரும்பமாட்டீர்களோ அதைநீங்களும் மற்றவர்களுக்குச்செய்யாதீர்கள்.

சிறந்தமனிதத் தன்மை அல்லது மேன்மைக்குணம் என்பதுதொடுவானத்தில் எட்டாததொலைவில் இருக்கின்ற இலட்சியம் அல்ல. நீங்கள் விரும்பினால்போதும் அது உங்கள் கைக்குஎளிதாக கிடைத்துவிடும்.

உயர்ந்தகுணமுள்ள மனிதன் தான் எதைப்பற்றி யாரிடம்பேசுகிறோம் என்பதைகுறித்து மிகுந்தகவனம் செலுத்துவான்.

கண்ணியமான மனிதன் தன்னைத்தானே குறைகூறிக்கொள்வான், சாதாரணமனிதன் பிறரை குறைகூறுவான்.

விவேகமான மற்றும் முட்டாள்தனமான மனிதர்களை மட்டும் ஒருபோதும் மாற்றமுடியாது.
 
பெற்றோருக்கான தொண்டு மேலோரிடம் மரியாதை, நண்பர்களிடம் நல்லுறவு நாட்டுக்கான அர்ப்பணிப்பு கொண்டவனே உண்மையில் கற்றறிந்தவனாவான்.

இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒருசிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.

உனது வீட்டில் எளிமையாகவும், பணிவாகவும் இரு. தொழில் செய்யும் இடத்தில மதிப்போடு இரு, பழகுபவர்களிடம் விசுவாசத்தோடு நடந்துகொள். நீ காட்டுமிராண்டிகளிடையே வசிக்க நேர்ந்தாலும் இந்த நோக்கங்களைக் கைவிட்டு விடாதே.

தன்னுடைய புறத்தோற்றத்தில் காட்டும் அதே அளவு அக்கறையை, தனது நன்னடத்தையிலும் காட்டும் மனிதனைத்தான் இந்த உலகம் விரும்புகிறது.

மனத்திடம் இல்லாத மனிதனால் வறுமையையும் சரி செல்வநிலையையும் சரி வெகுநாள் தாங்க முடியாது.

பேசத் தகுந்த மனிதரோடு பேசத் தவறி விட்டால் நாம் அவரை இழந்து விடுகிறோம். பேசத் தகாத மனித ரோடு பேசினால் நமது வார்த்தைகள் பயனற்று வீணாகி விடுகின்றன. அறிவாளி என்பவன் நல்ல மனிதரையும் இழக்க மாட்டான். வார்த்தை களையும் வீணாக்க மாட்டான்.

நான் மாறும் போது தானும் மாறியும் நான் தலை யசைக்கும் போது தானும் தலை யசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை, அதற்கு என் நிழலே போதும்.

இலக்குகளை அடைய முடியாது என்று தெரியும்போது, நமது செயல்பாட்டு முறையினை சரி செய்ய வேண்டுமே தவிர இலக்குகளை சரி செய்யக்கூடாது.

=====================================================================

சீனா தத்துவஞானி கன்பூசியல் / கன்பூசியஸ் தத்துவங்கள் / கன்பூசியஸ் பொன்மொழிகள் / கன்பூசியஸ் தத்துவ கருத்துக்கள்

=====================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.