பேரறிஞர் அண்ணா சொன்ன தத்துவங்கள்!

இவற்றை நாம் கற்பனையில் எழுதவில்லை. கா. ந. அண்ணாதுரை எனும் பேரறிஞர் அண்ணா சொன்ன தத்துவங்கள் இங்கே அண்ணாவின் பொன்மொழிகள் எனும் தலைப்பில் வெளியிடப்படுகிறது.


பிறரின் தேவையின் போது நல்லவராக தெரியும் நாம்தான், அவர்கள் தேவைகள் முடிந்தவுடன் கெட்டவர்ஆகிவிடுகிறோம்.


வாழ்கை ஒருபாறை, உங்களிடம் அறிவுஎனும் உளிஇருக்கிறது. அழகாகசிற்பமாக வடித்துரசிப்பதற்கு என்ன?


நாள், நட்சத்திரம், சாத்திரம் எனும் அத்தனையும் மனிதமுயற்சிக்கு போடப்படும் தடைகற்கள்.


எவ்வளவு அலட்சியம், ஏளனம் செய்யப்பட்டாலும், எடுத்த காரியத்தை முடித்தே தீருவது எனும் திடசித்தமும், விடாமுயற்சியும் இருந்தால்வெற்றி கிடைத்தேதீரும்.


போட்டியும், பொறாமையும், பொய்சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம்நேராக நடந்துசெல்ல நமக்குதுணையாக இருக்கக் கூடியது கல்விமட்டுமே.


நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாகஇருக்கட்டும்.


உழைப்பேசெல்வம், உழைப்பார்க்கே உரிமையெல்லாம். உழைப்பாளிகளுக்கே இந்தஉலகம் உரியது.


சட்டம் ஓர்இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஓர்விளக்கு! அந்தபிரகாசமான விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை.


எதிரிகள் தாக்கிதாக்கி தங்கள்வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கிதாங்கி வலுவை பெற்றுகொள்ளுங்கள்.


தன்னைவென்றவன் தரணியைவெல்வான்.


கண்டனத்தை தாங்கிகொள்ளும் திடனமில்லை என்றால் கடமையை நிறைவேற்றமுடியாது!


ஜாதிகள் இருக்க வேண்டுமென நினைப்பவர்கள். உலகம் எவ்வழி செல்கிறது என்பதை அறியாத கோமாளிகள்!


ஒருவேலைக்கும் இன்னொருவேலைக்கும் இடையே செய்யும்வேலைதான், ஓய்வு.


ஏழைகளை வஞ்சிக்க ஓர்ஏற்பாடு - அதற்குபெயர் மதம். உழைப்பவனை ஒடுக்க ஓர்இயந்திரம் - அதற்குபெயர் ஜாதி. கொள்ளையடிப்பதற்கு ஒரு திட்டம் - அதற்குபெயர் பூஜை, தர்ச்சனை, சடங்கு.


உழவனின் உள்ளத்திலே புயல்இருக்குமானால் வயலிலேவளம் காணமுடியாது.


பாடத்திட்டங்களில் பகுத்தறிவைபுகுத்தும் தீவிரமானதிட்டம் உருவாக்கப்படாத வரையில் பகுத்தறிவுவளராது நம்நிலையும்உயராது.


மோரைகடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல அறிவைவளர்த்துக்கொண்டு பலன்பெறவேண்டும்.


விதியைநம்பி, மதியைபறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிகமிககேடு, தீங்கு.


ஒருநாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால் அந்நாட்டுமக்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக இருக்கவேண்டும்.


அஞ்சா நெஞ்சு படைத்த இலட்சியவாதிகள் ஒருநாட்டிற்கு கிடைக்ககூடிய ஒப்பற்றசெல்வங்கள்.


சமூகப் புரட்சிபணியிலே ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை துன்பமானதுதான். ஆனால் அவர்களதுபெயர் வரலாற்றில் நிலைத்துநிற்கிறது.

=====================================================================

 பேரறிஞர் அண்ணா சொன்ன தத்துவங்கள், பொன்மொழிகள், தத்துவ வரிகள்

=====================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.