தோல்வி அடைந்தவர்கள் வெல்வதற்கு வழி! படியுங்கள் வாழ்வில் வெற்றி பெறுங்கள்!

கிராமத்தின் மத்தியில் யானைகள் பல கட்டபட்டிருந்தன. அக்கிராமத்தின் வழியே போன ஒருவன் அந்த யானைகளை பார்த்து கொண்டே சென்றான்.

ஒரேஒரு கயிறு மட்டுமே யானைகளின் காலில் கட்டப்பட்டு இருந்தது. இதனை பார்த்தவனுக்கு மனதில் பெரும் சந்தேகம் எழுந்தது.

இந்த பெரிய உருவத்தை கொண்ட யானைகளை இந்த சின்ன கயிறில் கட்டப்பட்டுள்ளது, அந்த யானைகள் இதை அறுத்து கொண்டு போயிடாதா என கேள்வி எழுந்தது அவனுக்கு.

உடனே அருகில் இருந்த பாகனிடம் சென்று தனது மனதில் தோன்றிய கேள்வியை கேட்டான். இதற்கு பாகன் அழித்த பதிலை கண்டு வியந்தான்.

யானைகள் சின்னதாக உள்ளபோது இந்த கயிற்றினால்தான் கட்டினோம். அப்பொழுது யானை அக்கயிற்றினை இழுக்கும்போது கயிறுகள் அற வில்லை. 

ஆகவே யானைகள் பெரிதாக பெரிதாக வளர்ந்தாலும் தன்னால் கயிற்றினை அறுக்க முடியாது என எண்ணி கயிற்றை அறுப்பதற்கு முயற்சி செய்வதில்லை என பாகன் சொன்னான்.

இந்த கயிற்றினை அறுப்பதற்கு யானைகளுக்கு ஒரு விநாடி போதுமானது. ஆனால் அவை அதற்கு முயற்சி செய்யவில்லை. அதனால் தான் அவைகள் கட்டுண்டு கிடக்கின்றன.

இந்த யானைகளை போல நம்மில் எத்தனை பேர் ஒரு முறை தோற்று போயிருக்கிறோம். அதுவும் மீளவும் முயற்சி செய்யாமல் துவண்டு போய் இருக்கிறோம்.

தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை, அன்பு உறவுகளே தோல்வி என்பது வெற்றியின் முதல் படி, தொடர் முயற்சியே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்...!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.