பகத்சிங் சொன்ன தத்துவங்கள்

பாரத மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் புரட்சியாளன் பகத்சிங் சொல்லிய பொன்மொழிகள் இங்கே தத்துவங்கள் எனும் தலைப்பில் பதிவேற்றப்பட்டுள்ளது.

1. தனி ஒரு மனிதனை கொலை செய்வது சுலபமானது. ஆனால்.. சுதந்திர வேட்கையை கொல்ல முடியாது.

2. எமக்கு ஏற்பட்ட கவலையில் மூழ்கி கண்ணீர் சிந்துவதை விட இலட்சியத்தை நோக்கி உதிரத்தினை சிந்துவது மேலானது.

3. முதலாளித்துவத்தை தூக்கி எறிவதே புரட்சியின் நோக்கம் 

4. கேட்காத காதுகளை உரத்த குரல்களால் கேட்க செய்ய முடியும்.

5. என்னுடைய ஆழ்ந்த சிந்தனையினால் தான் கடவுளை மறுக்கிறேன். மாறாக அகங்காரத்தினால் அல்ல.

6. மக்களது நம்பிக்கையினை பெற்றுள்ளவரையே சட்டம் தனது புனித தன்மையினை பெற்று இருக்கும்.

7. இரத்த வெறி கொண்ட மோதல் மாத்திரம் புரட்சியல்ல. புரட்சி என்பது வெடிகுண்டுகள் துப்பாக்கிகளை வழிபடுவதல்ல. புரட்சியின் ஊடாக அநீதி இழைக்கப்டட சமூகம் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

8. குருட்டு நம்பிக்கை மிகவும் ஆபத்தானது. இது மனிதனது மூளையினை முடமாக்கி மனிதனை பிற்போக்கில் தள்ளி விடும்.

9. மெழுகுவர்த்தியின் ஒளி மங்கந்தை போல நானும் மறைந்துவிடுவேன். ஆனால் நமது இலட்சியங்கள் இவ்வுலகத்தை பிரகாசிக்க செய்யும்.

10. எனது நாடு என்றோ ஒருநாள் சுதந்திரமடையும் என்பது எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. எனினும் கொள்ளையர்கள் விட்டு சென்ற கதிரையில்  போலி தேசியவாதிகள் உட்கார்ந்து விடுவார்கள் எனும் பயம் எனக்குள்ளது.

11. அநீதிக்கு எதிராக எம்மால் தொடங்கப்பட்ட போர் இனிவரும்காலத்திலும் முடியாது.

12. விடுதலையை போராடி கொண்டு வரும்போது அதனை சாத்தியமற்றதாக மாற்ற முற்படும் நபர்களை பலியிடுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்

13.தியாகத்தின் மூலமே புரட்சியாளர்களின் கொள்கைகள் வலுவடையும். மாறாக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதன் ஊடாக அல்ல.

14. புரட்சி என்பது சொல் அல்ல மாறாக செயல். திட்டமிட்ட சமர் நடவடிக்கைகளின் ஊடாக மாற்றங்களை கொண்டு வருவதே புரட்சியாகும்.. திட்டமிடாத விடையங்கள் எதுவும் இதில் நடந்து விடாது.

15. கடுமையான விமர்சனங்களும் சுதந்திரமான சிந்தனைகளுமே புரட்சியின் தேவைகளாகும்.

16. இச்சமூகத்தின் உண்மை கடவுள் தொழிலார்களே!

பாரதத்தின் சுதந்திரத்திற்காக போராடி தனது 23வது வயதில் தூக்கிலிடப்பட்டவர் பகத்சிங் எனும் புரட்சியாளன்!

=====================================================================

பகத்சிங் தத்துவங்கள் பொன்மொழிகள் சிந்தனைகள் உபதேசங்கள்

=====================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.