அண்ணாவின் கதை

ஜனாப்ஜின்னா உயிரோடிருந்த காலம் பாகிஸ் தானத்தின் தந்தையும் முஸ்லீம்லீக் கட்சியின் தலைவருமான ஜனாப்ஜின்னாவை ஒருதடவை சந்தித்து நாட்டின் அரசியல்நிலை மை பற்றி தந்தைபெரியார் உரை யாடினார்.

அப் பொழுது உடன்இருந்த அண் ணா ஜனாப்ஜின்னாவின் ஆங் கிலப் பேச் சைத் தமிழில் மொழிபெ யர்த்துப் பெரியா ருக்கு உதவி னார்.

அண்ணா வின் ஆங்கில மொழித் திற மையை ஜனாப்ஜின்னா கண் டார், வியப்பு மிகக் கொ ண்டார். அண்ணா வின் முகத்தை கூர்ந்து நோக் கினார். அவரது பரந்த முகம், அகன்ற நெற்றி, செழித்த புருவம், விசால மான விழிகள், அவை களில் ஊடுரு வி நின்ற ஆற்றல் ஒளி எல்லாம் சேர்ந்து ஜின் னாவுக்கு பிரமிப்பூட்டின.

“இந்த இளை ஞன் யார்?” என்று ஜின்னா கேட்டார்,

 “நம்ம பையன் தான்” என்றார் பெரியார்.

“இளை ஞன் சாதாரணமா னவனாகத் தோன் றவில்லை! இவ னுடைய அகன்ற விழிகள் என்ன வோ சொல்லவைக்கின்றன ஆசியாக்கண்டத் தையே அவை ஆட்டிபடைக்கும் ஆற்றல்கொண்டவை என்றுஎனக்கு தோன்றுகிறது.

இப்படிப் பட்டவரை நீங்கள் எப்படிஉங்களுடன் வைத்துகொண்டு இருக்கி றீர்கள்?” குறை யாத வியப்போடு தமதுகருத்தை வெளி யிட்டார் ஜின்னா.

"நீங்க சொல்கிற தெல்லாம் உண்மை தானுங்க, பையன்ரொம்ப கெட்டிக் காரனுங்க. ஆனால், ரொம்ப அடக்கமான வனுங்க, நமக்குபிள்ளை மாதிரிங்க..” பெரி யார் தெரி வித்த கருத்தை அண்ணா தான் மொழி பெயர்த்துசொல்ல வேண்டி யிருந்தது.

முதல்சந்திப்பிலேயே ஜின்னா வின் மதி ப்பீடு சரியாக இரு ந்தது. இப்படிப்பட்ட ஒருவ ரைத் தமதுமகனாக அன்று பெரி யார் கருதி யது வீண் போகவில்லை.
--------------------------------------------------------------------------------------------------------------
100 தலைவர்கள் 100 தகவல்கள் புத்தகத்தின் மூன்றாவது கதை
--------------------------------------------------------------------------------------------------------------
அண்ணாதுரை யின் கதை
--------------------------------------------------------------------------------------------------------------

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.