ரிஷிகள் மற்றும் சுவாமிகளின் சிந்தனைகள்

நற் சிந்தனைகள்-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
* மீன் கொத்திப் பறவை போன்று உலகத் தில் வாழ்ந்தி ருங்கள். அது நீருக்குள் இருக்கின்றவரை அதன் சிறகுகளில் நீர் ஒட்டிக் கொண் டிருக்கும். வெளியில் வந்து சிறகுக ளைக் குலுக்கியதும் ஒட்டிக் கொண்டிருந்த நீர் அகன்றுபோ ய்விடும்.அதுபோல உலக ஆசை களை விட்டு விடப் பழகிக் கொள்ளுங்கள்.

* மக்கள் பெரும் பாலும் புகழுக் காகவோ, புண் ணியத்தை தேடவோ பிறருக்கு உதவி செய்ய எண்ணு கின்றனர்.அத்தகைய உதவிகள் அனைத்தும் சுயநலத்தை அடிப்ப டையாகக் கொண்டவை.

* ஆசைகளில் பணத்தின் மீது கொண்ட பற்றும், காம எண்ண ங்களும் அனைவரின் மனதையும் ஆட்டிப்படை க்கின்றன.இந்த நோயைப் போக்க வேண்டு மானால் அடிக்கடி நல்ல வர்கள் கூடும் சத்சங்கம் ஒன்றுதான் வழி.

* பணத்தை ஏராள மாகச் சம்பாதித்த வர்கள் தங்களு டைய செல்வத்தை சொந்த சுக சவுகர்யங்களு க்காகச் செலவிடுவது போல,கஷ்டப்ப டுகின்ற ஏழைக ளுக்காகவும் செலவ ழிப்பதற்கு முன்வரவேண்டும்.

* உலகில் மக்கள் எத்தனை யோ துன்பங்க ளுக்கு ஆளானபோதும், ஆசைகளை அடக்குவ தில்லை.ஒட்டகம் முட்செடியைத் தின்னும் போது வாயில் ரத்தம் வழிந்தாலும் தன் செயலை அறியாமல் தொடர்ந்து கொண் டிருக்கும்.

* செடி ஒன்று பெரிய மரமாகி விட்டால், அதற்கு வேலி தேவை யில்லை. ஒரு யானையை அம்ம ரத்தில் கட்டும் அளவுக்கு மரம் வலிமை பெற்றுவிடும். அதுபோல, உள்ளத் தில் பக்குவம் வந்து விட்டால் வெளியுலக விஷயங்கள் ஒருவனை எந்தவிதத்திலும் பாதிப்பதில்லை.

தயானந்த சரஸ்வதி நற் சிந்தனைகள்
* மனிதர் களாகிய நமக்கு அத்வை தம் என்ற அனுபவம் கிடைக் காததால் வருந்து வதில்லை.
ஆனால், நம்மு டைய அன்றாட வாழ்க்கை யிலேயே அத்வைத உணர்வு இருக்கிறது. ஆனால்
அதை நாம் அத்வைதம் என்று உணர்ந்து கொள்ளாமல் தவிக்கிறோம்.

* மகாராஜா அரண்ம னையில் வசதிகளுடன் தூங்கு கிறார். பிச்சை க்காரன் மண் தரையில் அப்படியே படுத்துத் தூங்குகிறான்.தூங்கும் வரையில் இருவருக்கும் அவரவர் வசதிவா ய்ப்புகள், சூழ்நிலைகள் குறுக்கிடு கின்றன.

* தூங்கத் தொடங்கி விட்டாலோ இருவரும் அனுப விக்கும் நிலை ஒன்று தானே!இடம், நேரம், மனநிலைகள் எல்லாமே மறைந்து விடு கின்றன. தூக்கத்தில் ஆண்டி தன்னை தாழ்வா கவோ,அரசன் தன்னை உயர்வா கவோ எண்ணு வதற்கு இடமில்லை.

* ஒன்றை நாம் விரும்பித் தேடும்போது, வேண்டும் ஒருவனுக்கு அவன் நாடும் இன்னொ ன்றுமாக இரண்டு கிடைக்கின்றன.அந்த நிலையில் மகிழ்ச்சியும், நிறைவும் உண்டாகின்றன. இதுவே அத்வைத த்தின் அடிப்படை.

* நாம் வேறு, நம்முடைய அனுபவம் வேறு என்று இரண் டாகப் பிரிந்த நிலை யில் நமக்கு மகிழ்ச்சி உண்டா வதில்லை.அத்வைத நிலையில் உணர்பவரும், உணர்வதும் வேறுவேறாக இல்லாமல் இரண்டுநிலையும் ஒன்றாகி விடுகிறது.ஆழமான அமைதியான ஆனந்தமான ஒன்றிய நிலையே அத்வை தம். அதையே நாம் அன்றாடம் தூக்கத்தில் அனுபவிக்கிறோம்.

வேதாத்ரி மகரிஷி-நற் சிந்தனைகள்
* மனம் தான் மனிதவா ழ்வின் விளைநிலம். அதை செம் மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும்.

* மனதை அடக்க நினை த்தால் அலையும். அதை அறிய நினை த்தால் அடங்கும். தவறு செய்வதும் மனம் தான்.இனி தவறு செய்ய க்கூடாது என்று தீர்மா னிப்பதும் மனம்தான்.

* அன்றாடம் மனம் பலவித மான விஷயங் களில் அலையவிட்டு தடுமாற்றம் பெறுகிறது. குறிப்பிட்ட நேரம் தியானம் செய்து மனதை தூய்மைப்படுத்தினால் மனநலம் மே ம்பாடு அடையும்.

* வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கை யே. அதைக் கண்டு மிரள்வது அறிவு டைமை ஆகாது.அவற்றை எப்படி எதிர் கொள்வது என்று சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.

* கவலை ப்படுவதால் மட்டுமே சிக் கலில் இருந்து மீளமு டியாது. இன்னும் சொல்லப் போனால் கவலை யின்போது பிரச்னை மேலும் பெரிதா கிவிடும்.

* தீர்க்க முடி யாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடை யவே கிடையாது. தீர்க்கும் வழிவ கைகளை அறியாமல் தான் நாம் துன் பத்தைக் கண்டு அஞ்சுகிறோம். திற க்க முடியாத பூட்டு எதுவு மில்லை. அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடி த்தால் போதும்.

அகோ பில அழகிய சிங்கர் சுவாமிகள்-நற் சிந் தனைகள்
உண வை நல்லமு றையில் சமைப்பது எந்த அளவுக்கு முக் கியமோ, அவ்வளவு முக்கியம் அவ்வுண வு தூய் மையான மனதுடன் செய்ய வேண் டும் என்பதும் ஆகும். சமையல் செய்பவ ரின் மனோபாவமும் அவர் செய் யும் உணவில் கலந்து விடுவது இய ற்கையே.

சமைப்பவர் நல்ல குணமும், ஒழுக்கமும் கொண்டவராக இருக்க வேண்டும். மிகவும் தூய்மையை விரும்புபவர்கள் நிச்சயமாக தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று முற்காலத்தில் நம் முன்னோர்கள் நெறிமுறைகளை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

நாம் நமக்காக சமை க்கும்போது அதை சாதம் என்று அழைக்கி றோம். அதே உணவி னை ஆண்டவனுக்கு படைத்த பின் மீண்டும் நம்மிடம் கொண் டுவரும்போது பிரசா தமாகி விடுகிறது. "பிர' என்றால் "கடவுள் தன்மை'. உணவு என்பது மட்டுமல்ல,கடவுளுக் குப் படைக்கும் எந்தப்பொருளும், மேலும் புனிதம் பெற்று நம் மன தைத் தூய்மைப்ப டுத்துகிறது. கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவி னால்(பிரசாத த்தினால்) நம் உண ர்வுகள் மேன்மை பெற்று வாழ்வு அர்ததமுள் ளதாக மாறிவி டுகின்றன.


சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி-நற் சிந் தனைகள்
நாம் செய்ய வேண்டிய செயல்களை தகு ந்த சமயத்தில் செ யாமல் தள்ளிப் போடுகிறோம்.
இல்லாவிட்டால் இன்று சிறிது செய்யலாம்; நாளை அதிகமாகச் செய்யலாம் என்று என்று நினைக்கி றோம்.இதையே ஆன்மிகத்திலும் மனிதர்கள் செய்கிறார்கள். இள மையில் வேலை செய்து நிறைய பணம் சம்பாதிப்போம்.வயதா ன பிறகு பகவா னை நினை த்து வழிபட்டுக் கொள்ள லாம் என்று எண்ணுகிறோம்.

முதுமை யில் நாம் சரியாக பார் க்கவே முடியாது. கா துகள் கே ட்கும் சக்தியை இழந்து விடும்.
பகவானின் நாமங் களை சொல்ல விரும்பினாலும், ஜபிப் பதற்கு சக்தி இல்லாமல் போய் விடும்.சில மாணவர்களும் இவ்வாறு தா ன் இரு க்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் பாடத் தை விட்டுவிட்டு,பொழுது போக்குகளில் நேரத்தை கழிக்கிறார்கள். தேர்வு நேரத்தில் படித்தால் போதும் என எண் ணுகிறார்கள்.

காலத் தை வீண டித்து விட்டு, கடைசி நே ரத்தில் படி ப்பதால் குழப்பமே மிஞ்சும். தங்கள் சோம்பேறித்தனத்தால்,தேர்வில் தோல்வி அடைகிறா ர்கள். மனப்பக் குவம் அடைய விரு ம்பும் ஒ ருவன் "நாளை' பார்த்துக் கொ ள்ளலாம் என்று எண்ணா மல் அதற் கான முயற்சிகளை "இன்றே' ஆர ம்பிக்க வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.