"வாழும் காலத்தில் மனிதன் நல்லொழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் நீதிக்கு அடிபணிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ வேண்டும். அதற்கு மதம் தேவையில்லை."
2,500 ஆண்டுகளுக்கு முன்னர் சீன தேசத்தில் வாழ்ந்த தத்துவஞானி கன்பூசியஸ் அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்ல பல தத்துவ கருத்துக்களை கூறி இருக்கிறார்.
மரண படுக்கையிலில் தத்துவஞானி கன்பூசியஸ் அவர்கள் இருக்கும் போது அவரது சீடர்களுள் ஒருவர், குருவே எங்களுக்குக் கடைசியாக ஏதாவது அறிவுரை கூறுங்கள் என்று கேட்கின்றார்.
கன்பூசியஸ் தன் வாயைத் திறந்து காட்டி,
என் வாயில் என்ன தெரிகிறது? என்றார்.
“நாக்கு” என பதில் அளித்தார் சீடர்.
பற்கள் இருக்கிறதா? என்று கேட்டதும்,
“இல்லை” என்றார் சீடர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? என்றார் கன்பூசியஸ்.
எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்றார் சீடர்.
“நாக்கு மென்மையானது. பல் வலிமை மிக்கது. நாக்கு பிறந்தது முதல் நம் உடல் உறுப்புகளுள் ஒன்றாக உள்ளது. பல் பிறகுதான் முளைக்கிறது. வயது முதிர முதிர கீழே விழுந்து விடுகிறது. நாக்கு அப்படியே உள்ளது. நாக்கைப் போல மென்மையானவர்களாக இருங்கள். நீண்டநாள் வாழ்வீர்கள்” என்று இறுதியாகக் கூறினார்.
உனக்கு என்ன நிகழக்கூடாது என்று நினைக்கிறாயோ அதனை மற்றோருக்குச் செய்யாதே.
வாழ்க்கை மிக எளிமையானது. நாம்தான் அதைச் சிக்கலாக்கிக் கொள்ளத் துடிக்கிறோம் என்றார்
இவருடைய கோட்பாடுகள் ஒரு மதமாகவே கருதப்படுகிறது.