எம்.ஜி.ஆர் சொன்ன தத்துவங்கள்!

இவற்றை நாம் கற்பனையில் எழுதவில்லை MGR அவர்கள் சொன்ன கருத்துகளே இங்கே எம்.ஜி.ஆர் தத்துவங்கள் எனும் தலைப்பில் வெளியிடப்படுகிறது.

நம்பிக்கை எதன் மீதும் ஏற்படலாம், உண்மையில் நம்பிக்ககைக்குரியதாக இருக்க வேண்டும், அப்படி என்றால்தான் வெற்றிகிடைக்கும்.

நாம் எந்தக் காரியங்கள் செய்தாலும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.

நாட்டுக்காகப் பாடுபடுபவர்களாக கலைஞர்கள் இருக்க வேண்டும்; அப்போதுதான் அவர்கள்சிரஞ்சீவியாக இருப்பார்கள்.

சமுதாயத்தின் கட்டுப்பாடுகள், ஒவ்வொருமனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமையவேண்டும்.

கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைபெற்றிடுவோம்! அமைதியும்,ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்துபாடுபடுவோம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமைதேவை. மகிழ்ச்சிதேவை. இந்த தேவைகளுக்கு அடிப்படை வளரவும்,வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.

அறிவியல்துறையில் போட்டிவேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்படவேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அதுகிடைக்க வழி செய்யப்படவேண்டும்.

சமுதாய உணர்வோடு நாம்பிரச்சினைகளை அணுகவேண்டும்; நாம் தனிமனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம்ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!

வயிற்றுபசியைத் தீர்த்து கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப்பசியைத் தீர்த்துக்கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொருசெயலிலும் ஓர்ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ளவேண்டும்.

உழைப்பே உயர்வுதரும் உழைப்போம்,உயர்வோம். உழைப்போரேஉயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம்உயர்ந்திடும்.

மொழி,இனம்,கலாச்சாரம்,நாகரிகம் போன்றவற்றை மக்களை ஒன்றுசேர்ப்பதற்கும் சமுதாயத்தை உயர்த்துவதற்கும் மேம்மைபடுத்துவதற்கும் பயன்பட வேண்டும். இந்தஉயரிய குறிக்கோள்தான் தமிழ்ச்சமுதாயத்தின் குறிக்கோளாகும்.

நமதுசமுதாயத்தின் அனைத்துப் பகுதிமக்களும் நல்லிணக்கமான முறையில் சீராகமுன்னேற்றம் பெறஉத்தரவாதம் தரப்படவேண்டும்; சமநிலைக்குபங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமையவேண்டும்.

அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.

---------------------------------------------------------------------------------------------

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தத்துவங்கள், பொன்மொழிகள், தத்துவ வரிகள்

---------------------------------------------------------------------------------------------

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.